“அன்பைப் பகிர்வோம்” – தவெக தலைவர் விஜய் ரம்ஜான் வாழ்த்து!

தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் ரம்ஜான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் இன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, அரசியல் தலைவர்கள் இஸ்லாமிய மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், நாட்டு மக்களுக்கு தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் ரம்ஜான் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில், “அன்பைப் பகிர்வோம்!

சமூக நல்லிணக்கத்தையும் மனிதநேயத்தையும் சகோதரத்துவத்தையும் போற்றும் நன்னாளாம் இந்த ஈகைப் பெருநாள் புனித ரமலான் திருநாள்.

அனைவரின் வாழ்விலும், மகிழ்ச்சியையும், அமைதியையும் வளத்தையும் கொண்டு வரட்டும்!

என் அன்பு இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் இனிய புனித ரமலான் திருநாள் நல்வாழ்த்துகள்”! இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.