“ரமலான் உங்கள் வாழ்வில் புதிய நம்பிக்கையையும் ஒளியையும் கொண்டு வரட்டும்” – நயினார் நாகேந்திரன்!

ரமலான் உங்கள் வாழ்வில் புதிய நம்பிக்கையையும் ஒளியையும் கொண்டு வரட்டும் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “புனித ரமலான் பண்டிகையை கொண்டாடும் இஸ்லாமிய சகோதரர் சகோதரிகள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த இனிய ரமலான் நல்வாழ்த்துக்கள்!

இந்த புனித மாதம் நம் உள்ளங்களை தூய்மைப்படுத்தி, கருணை, பொறுமை, தியாகம் மற்றும் மனிதநேயத்தின் உயர்ந்த மதிப்புகளை நமக்குள் மேலும் வலுப்படுத்தும் அருமையான காலமாகும்.

அனைவரின் வாழ்விலும் அமைதி நிலைத்து, மகிழ்ச்சி பெருகி, அன்பும் நிம்மதியும் என்றும் தங்கட்டும். சகோதரத்துவமும் நல்லிணக்கமும் மேலும் வளர்ந்து, உங்கள் இல்லங்களில் செழிப்பும் மகிழ்ச்சியும் நிரம்பியிருக்க இறைவனை பிரார்த்திக்கிறேன். இந்த ரமலான் உங்கள் வாழ்வில் புதிய நம்பிக்கையையும் ஒளியையும் கொண்டு வரட்டும். ரமலான் முபாரக்! இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.