தொடர் மின்வெட்டு – மக்கள் அவதி

தமிழ்நாடு முழுவதும் பல இடங்களில் நேற்றும் தொடர் மின்வெட்டு நிலவியதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர். தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை முதல் தொடர் மின்வெட்டு இருந்தது. உடன்குடி மற்றும் ஆறுமுகநேரி பகுதிகளில்…

தமிழ்நாடு முழுவதும் பல இடங்களில் நேற்றும் தொடர் மின்வெட்டு நிலவியதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை முதல் தொடர் மின்வெட்டு இருந்தது. உடன்குடி மற்றும் ஆறுமுகநேரி பகுதிகளில் 8 மணி நேரம் மின்தடை ஏற்பட்டதால் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். மேலும், இரவு நேரத்திலும் மின்வெட்டு நீடித்ததால் வீட்டிற்கு வெளியே தங்களது குழந்தைகளை உறங்க வைக்கும் நிலை ஏற்பட்டதாக பெற்றோர் குற்றஞ்சாட்டினர்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முழுவதும் தொடர் மின்வெட்டு நிலவியது. போளூர், வந்தவாசி, செய்யார் உள்ளிட்ட பகுதிகளில் மின்வெட்டு காரணமாக பொது மக்கள் அவதிக்குள்ளாகினர். மேலும், இரவு நேரத்தில் உறங்க முடியாமல் தவிப்பதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். மேலும், வயதானவர்கள் மற்றும் நோயாளிகள் கடும் சிரமத்திற்கு ஆளானதாக பொதுமக்கள் புகாரளித்துள்ளனர்.

முன்னதாக, தமிழ்நாட்டின் ஒருநாள் மின் தேவையை பூர்த்தி செய்ய 72ஆயிரம் டன் நிலக்கரி தேவையாக உள்ள நிலையில், 48 ஆயிரம் டன் முதல் 50 ஆயிரம் டன் மட்டுமே கிடைப்பதால், மின் பற்றாக்குறை உள்ளதாக கூறினார். மத்திய தொகுப்பிலிருந்து வரவேண்டிய 716 மெகாவாட் மின்சாரம் வராததும், மின்தடைக்கு காரணம் எனவும் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.