முக்கியச் செய்திகள் தமிழகம்

சென்னை ஐஐடியில் உயரும் கொரோனா தொற்று எண்ணிக்கை

சென்னை ஐஐடியில் மேலும் 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ் வளாகத்தில் அமைந்துள்ள மாநில தடுப்பூசி மருந்துகள் சேமிப்பு கிடங்கில் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், சென்னை ஐஐடி-யில் மேலும் 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

மேலும், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் ஐஐடி வளாகத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கூறினார். தமிழ்நாட்டில் இதுவரை ஒமிக்ரான் XE வகை கொரோனா தொற்று கண்டறியப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும், தமிழ்நாட்டில் 1.46 கோடி பேர் 2-வது தவணை தடுப்பூசி செலுத்தவில்லை என்று தெரிவித்த ராதாகிருஷ்ணன், பொது இடங்களில் முகக்கவசம் அணியாவிட்டால் அபராதம் வசூலிக்கப்படும் என்று கூறினார்.

கொரொனா தாக்கத்தின் வீரியம் மீண்டும் அதிகரித்துள்ளதால் மக்கள் அனைவரும் விழிப்புணர்வோடு செயல்பட வேண்டும் எனவும், அவ்வாறு செயல்பட்ட்டால்
கொரோனாவை வென்று விடலாம் எனவும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். மேலும், அனைவரும் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

பயிற்சியாளர் ஸ்டீபன் ஃப்ளெமிங்-ன் பிறந்தநாளைக் கொண்டாடிய சிஎஸ்கே!

Halley Karthik

டெல்லி போராட்டம் – போலீசார் தள்ளியதில் ப. சிதம்பரத்திற்கு விலா எலும்பு முறிவு

Mohan Dass

கோடநாடு வழக்கு: காவல்துறை பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

Ezhilarasan