தொகுதி பங்கீடு ; வலிமைக்கு ஏற்ப அதிகார பகிர்வு கேட்டுள்ளோம் – திருமாவளவன்…!

திமுகவிடம் எங்கள் வலிமைக்கு ஏற்ப அதிகார பகிர்வு கேட்டுள்ளோம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

தமிழ் நாடு தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இந்த நிலையில் இன்று இந்தியா கூட்டணியில் இருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி திமுகவின் தல்லைமையகம் அறிவாலயத்தில் தேர்தல் பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியது.

பேச்சுவார்த்தைக்கு பின் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசியதாவது ;

திமுக குழுவினரோடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டோம். 2026 தேர்தலானது வழக்கமான பொதுதேர்தல் அல்ல. வலது சாரி சக்திகளை காலுன்ற விடக்கூடாது. மதசார்பற்ற ஜனநாயக சக்திகளுக்கு இடம் அளிக்க வேண்டும். மதவாத அரசியலுக்கு தமிழகத்தில் இடம் இல்லை.

திமுகவுடன் பேரம் பேசு நிலையில் இல்லை. எங்களுக்கான அதிகார பகிர்வு குறித்து கருத்துக்களை பகிர்ந்து கொண்டோம்.

முதலமைச்சருடன் பேசி பிறகு மீண்டும் அழைப்பதாக கூறியுள்ளனர். எங்கள் வலிமைக்கு ஏற்ப அதிகார பகிர்வு கேட்டு உள்ளோம். பாண்டிச்சேரியில் ஒரு தனி தொகுதி, இரண்டு பொது தொகுதிகள் என 3 தொகுதிகள் கேட்டு உள்ளோம். அதிகார பகிர்வு என்பது தொகுதி தான்.

தேசிய அளவில் பெரிய சக்தி என்பதால் காங்கிரஸ் ஒரு நிலைப்பாட்டை அறிவிக்கிறார்கள் அதில் நான் கருத்து சொல்ல முடியாது. எப்படி ஆனாலும் காங்கிரஸ் திமுக கூட்டணியில் தான் இருக்கும்”

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.