இந்தியாவில் ஆண்டுதோறும் ஐபிஎல் போட்டிகள் நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு நடைபெற்ற 18 ஆவது ஐபில் தொடரில் பெங்களூரு அணி கோப்பையை வென்றது.
இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடரானது மார்ச் 28 ஆம் தேதி தொடங்கும் என்றும் இறுதிப் போட்டி மே 31 ஆம் தேதி நடைபெறும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனையொட்டி சென்னை அணி வீரர்கள் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் சென்னை அணி தனது எக்ஸ் பக்கத்தில் அணியின் முன்னாள் கேப்டன் தோனி பயிற்சி செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளது.
அந்த வீடியோவில் தோனி பேட்டிங் செய்ய ஒருவர் பந்து வீசுகிறார். அந்த பந்து அகலப்பந்தாக செல்கிறது. இதனால் தோனி உடனே வைட் என்பது போல கைகளை அகல விரித்து துள்ளி குதிக்கிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் பரவலாகி வருகிறது.








