ஈரான் மீது அமெரிக்கா- இஸ்ரேல் நடத்திய கூட்டுத்தாக்குதலில் அந்நாட்டின் உச்ச தலைவர் ஆயத்துல்லா காமேனி கொல்லப்பட்டார். இதனையடுத்து இஸ்ரேலைக் குறிவைத்தும், பல்வேறு வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மீதும் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை ஏவி, ஈரான் எதிா் தாக்குதலை நடத்தி வருகிறது. இஸ்ரேலும் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்த நிலையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமன் நெதன்யாகுவின் அலுவலகத்தை ஏவுகணை மூலம் தாக்கியுள்ளதாக ஈரானின் புரட்சிகர தேசிய காவல்படை (IGRC) அறிவித்துள்ளது. தாக்குதல் நடந்தத போது நெதன்யாகு அலுவலகத்தில் இருந்தாரா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
இந்த தாக்குதல் தொடர்பாக ஐஜிஆர்சி கூறியுள்ளதாவது; ” இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகுவின் அலுவலகமும், ஆட்சியின் விமானப்படை தளபதியின் இருப்பிடமும் கெய்பர் ஷெகான் பாலிஸ்டிக் ஏவுகணைகளால் தாக்கப்பட்டன.
முன்னதாக காமேனி கொல்லப்பட்டதை கண்டித்து இஸ்ரேல் மீது ஈரானிய ஆதாரவு பெற்ற ஹிஸ்புல்லா இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக லெபனான் மீது இஸ்ரேல் நடத்தியதாக்குதலில் 31 பேர் கொல்லப்பட்டனர். 149 பேர் காயமடைந்தனர்.







