ஹாலிவுட்டில் அண்மை காலத்தில் மிகவும் கிசுகிசுக்கப்படும் ஜோடி ஸ்பைடர் மேன் புகழ் நடிகர் டாம் ஹாலண்டும் நடிகை ஜெண்டயா ஆவர். இருவரும் காதலிப்பதாக அவ்வப்போது கிசுகிசுக்கள் வருவது வழக்கம். ஆனால் இது குறித்து இருவரும் வெளிப்படையாக எதனையும் அறிவிக்கவில்லை.
இந்த நிலையில் டாம் ஹாலண்டும் நடிகை ஜெண்டயா ஜோடி திருமணம் செய்துகொண்டுள்ளாதாக ஜெண்டயாவின் ஸ்டைலிஸ்டான லா ரோச் கூறியுள்ளார். இந்த் செய்தி காட்டுத்தீ போல இணையம் முழுவதும் பரவி வருகிறது.
இது தொடர்பாக விருது வழங்கும் விழா ஒன்றில் பேசியுள்ள லா ரோச், ”டாம் – ஜெண்டயா திருமணம் ஏற்கனவே நடந்துவிட்டது. நீங்கள் அதைத் தவறவிட்டீர்கள்” என்று கூறினார். தொடர்ந்து நிருபர் “அது உண்மையா?” என்று கேட்டபோது, சிரித்துக்கொண்டே, “அது மிகவும் உண்மை!” என்று லா ரோச் பதிலளித்தார்.
Law Roach when asked about Tom Holland and Zendaya’s wedding:
“The wedding has already happened. You missed it.” pic.twitter.com/aaUCYFiLXz
— best of tom holland (@thollandrchive) March 2, 2026
கடந்த ஆண்டு கோல்டன் குளோப் விருது விழாவில் பங்கேற்ற ஜெண்டயா தனது விரலில் வைர மோதிரம் ஒன்றை அணிந்திருந்தார். அப்போதே இருவரும் நிச்சயதார்த்தம் செய்து கொணடதாக தகவல்கள் வெளியாகின.
டோபி மற்றும் கார்பீல்ட் ஆகியோருக்கு அடுத்தபடியாக ஸ்பைடர்மேன் கதாபாத்திரம் டாம் ஹாலண்டை வைத்து ரீபூட் செய்யப்பட்டது. இதில் பீட்டர் பார்க்கரின் காதலி கதாபாத்திரமான எம்ஜே கதாபத்திரத்தில் ஜெண்டயா நடித்திருந்தார். அப்போதிருந்தே இருவரும் காதலிப்பதாக கூறப்படுகிறது. அவர்கள் ஸ்பைடர் மேன்: ஹோம்கமிங் (2017), ஸ்பைடர் மேன்: ஃபார் ஃப்ரம் ஹோம் (2019) மற்றும் ஸ்பைடர் மேன்: நோ வே ஹோம் (2021) ஆகிய மூன்று படங்களில் ஒன்றாக நடித்தனர். மேலும் வரவிருக்கும் ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே படத்திலும், கிறிஸ்டோபர் நோலனின் தி ஒடிஸி படத்திலும் அவர்கள் இருவரும் நடிக்கின்றனர்.
ஜூன் 2023 ஒரு பேட்டியின் போது பேசிய ஹாலண்ட், “எங்கள் உறவு மிகவும் பாதுகாக்கப்பட வேண்டிய ஒன்று, முடிந்தவரை புனிதமாக வைத்திருக்க விரும்புகிறோம். நாங்கள் அதை யாருக்கும் கடன்பட்டிருப்பதாக நாங்கள் நினைக்கவில்லை, அது எங்கள் விஷயம், அதற்கும் எங்கள் தொழில் வாழ்க்கைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை” என்றார்.








