சென்னையில் ஆளுநரை கண்டித்து காங்கிரஸ் இன்று ஆர்ப்பாட்டம்!

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

தமிழ்நாடு காங்கிரஸ் துணைத்தலைவர் (ஊடக பொறுப்பாளர்) ஆ.கோபண்ணா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:


“நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றுள்ள த.வெ.க. ஆட்சி அமைக்கக்கூடாது என்ற நோக்கத்துடன் இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராக செயல்படும் மத்திய பா.ஜ.க அரசைக் கண்டித்தும், அவர்களின் கைப் பாவையாக செயல்படும் கவர்னரை கண்டித்தும், சென்னை அண்ணா சாலை, தாராப்பூர் டவர் அருகில் 8-ம்தேதி (இன்று) வெள்ளிக்கிழமை காலை 11 மணியளவில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.