வெளியானது பிளஸ்-2 தேர்வு முடிவுகள் – 95.20 சதவீத மாணவர்கள் தேர்ச்சி!

பிளஸ்-2 பொதுத்தேர்வில் 95.20 சதவீத மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு பள்ளிகல்வித்துறை சார்பில் கடந்த மார்ச் 12 ஆம் தேதி முதல் 26 வரை பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்றது. மாநில பாடத்திட்டத்தில் நடைபெற்ற இத்தேர்வை சுமார் 8 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர்.

இந்த தேர்வுக்கான விடைத்தாள்களானது ஏப். 6 முதல் 20-ம் தேதி வரை நடைபெற்றது. மேலும் தேர்வு முடிவுகள் (மே.08) நாளை வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் நிலவும் அரசியல் சூழல் காரணமாக திட்டமிட்டபடி தேர்வு முடிவுகள் வெளியாகுமா என்கிற கேள்வி எழுந்தது. இதனைத்தொடர்ந்து இன்று தேர்வு முடிவுகள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. பிளஸ்-2 பொதுத்தேர்வில் 95.20 சதவீத மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. இதன்படி மாணவர்கள் 93.19 சதவீதமும், மாணவிகள் 97 சதவீதமும் தேர்ச்சி அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாடவாரியான தேர்ச்சி சதவீதம்:

தமிழ்- 98.96 சதவீதம்

ஆங்கிலம்- 98.74 சதவீதம்

இயற்பியல்- 98.87 சதவீதம்

வேதியியல்- 98.82 சதவீதம்

விலங்கியல் – 98.69 சதவீதம்

மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதத்தில் 98.87 சதவிகிதத்துடன் ஈரோடு முதலிடமும், சிவகங்கை 98.05 சதவிகிதத்துடன் இரண்டாமிடத்திலும், கன்னியாகுமரி 97.63 சதவிகிதத்துடன் மூன்றாமிடமும், திருநெல்வேலி 97.54 சதவிகிதத்துடன் நான்காம் இடத்திலும், திருச்சி 97.50 சதவிகிதத்துடன் ஐந்தாம் இடமும் பெற்றுள்ளன. tnresults.nic.in, dge.tn.gov.in, results.digilocker.gov.in w இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.