தமிழ்நாடு பள்ளிகல்வித்துறை சார்பில் கடந்த மார்ச் 12 ஆம் தேதி முதல் 26 வரை பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்றது. மாநில பாடத்திட்டத்தில் நடைபெற்ற இத்தேர்வை சுமார் 8 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர்.
இந்த தேர்வுக்கான விடைத்தாள்களானது ஏப். 6 முதல் 20-ம் தேதி வரை நடைபெற்றது. மேலும் தேர்வு முடிவுகள் (மே.08) நாளை வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் நிலவும் அரசியல் சூழல் காரணமாக திட்டமிட்டபடி தேர்வு முடிவுகள் வெளியாகுமா என்கிற கேள்வி எழுந்தது. இதனைத்தொடர்ந்து இன்று தேர்வு முடிவுகள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
முன்னதாக தமிழ்நாட்டில் புதிய அரசு பதவியேற்பதில் இழுபறி போன்ற அரசியல் சிக்கல்களால் நாளை தேர்வு முடிவுகள் திட்டமிட்டப்படி வெளியாகாது என தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் ஏற்கனவே அறிவித்தப்படி தேர்வு முடிவுகள் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று காலை 9.30 மணிக்கு பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகும். பள்ளி மாணவ மாணவிகள் tnresults.nic.in, dge.tn.gov.in, results.digilocker.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளங்களுக்கு சென்று, பதிவு எண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை கொண்டு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.







