காவிரி ஒழுங்காற்று குழு இன்று கூடுகிறது!

காவிரி ஒழுங்காற்றுக் குழு காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு ஆகஸ்ட் மாதம் திறந்துவிடப்பாடும் தண்ணீர் குறித்து விவாதிக்க இன்று கூடுகிறது.

காவிரி நீர் பங்கீட்டை நிர்வகிக்க உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி ஒழுங்காற்று குழு அமைக்கப்பட்டன. இந்த 2 அமைப்புகளும் மாதம்தோறும் கூடி காவிரி நீர் பங்கீட்டு பிரச்சினைகள் பற்றி ஆலோசிக்கின்றன.

இந்த நிலையில் இன்று காவிரி நீர் ஒழுங்காற்று குழு கூட்டம் நடைபெற உள்ளது. இதில் கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களின்பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.

இக்கூட்டத்தில் ஆகஸ்ட் மாதம் காவிரியில் இருந்து திறந்துவிடப்பாடும் தண்ணீர் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. மேலும் அணைகளில் இருக்கும் நீரின் இருப்பு தொடர்பாகசு விவாதிக்கப்பட உள்ளது.

கடந்த ஜூலை மாதம் தமிழகத்திற்கு 3500 கன அடி வீதம் நீரை கர்நாடகம் திறக்க வேண்டும் என காவிரி ஒழுங்காற்று குழு அறிவுறுத்தியும் கர்நாடக அரசு தண்ணீர் திறக்காத நிலையில் இன்றைய கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.