முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

70 ஆண்டுகளாக அரசியல் சாசனத்தை காப்பாற்றியது காங்கிரஸ்: பாஜகவை தாக்கிய கார்கே

காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக தாக்கி பேசியதுடன், கடந்த 70 ஆண்டுகளாக அரசியல் சாசனத்தை காங்கிரஸ் கட்சியே காப்பாற்றி வந்ததாக கூறியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல் காந்தி தலைமையிலான பாரத் ஜோடோ யாத்ரா, நேற்று (வியாழக்கிழமை) பீகார் மாநிலம் பாங்கா மாவட்டத்தில் தொடங்கியது. அப்போது அங்கு தொடங்கிய யாத்திரையை கொடியசைத்து தொடங்கி வைத்த தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் கார்கே, இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பாஜகவின் பங்களிப்பு குறித்து பேசினார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அதில், கடந்த 70 ஆண்டுகளில் காங்கிரஸ் என்ன செய்தது என்று பிரதமர் மோடி அவ்வப்போது கேட்கிறார். அரசியல் சாசனத்தை காப்பாற்றியது காங்கிரஸ்தான். அதனால்தான் அவரைப் போன்ற ஒருவர் பிரதமராகவும், என்னைப் போன்ற ஒரு ஏழையின் மகன் அகில இந்திய காங்கிரஸ் தலைவராகவும் இருக்க முடிந்துள்ளது என்பதை அவரிடம் நான் கூற விரும்புகிறேன் என்று கூறினார்.

மேலும் இந்திய நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் பாஜக எந்தப் பங்களிப்பையும் செய்யவில்லை, அதன் தொண்டர்கள் யாரும் சிறைக்குச் சென்றதில்லை என்றும் கூறியதோடு, “பாஜக நாட்டுக்கு சுதந்திரம் கொடுக்கவில்லை, அவர்களின் தொண்டர்கள் யாரும் சிறைக்கு செல்லவில்லை. காங்கிரஸ் இந்தியாவுக்கு சுதந்திரம் அளித்து அதன் வளர்ச்சிக்கு பங்களித்தது” என்று கூறினார்.

இதுமட்டுமின்றி மதத்தின் பெயரால் சமுதாயத்தை பிளவுபடுத்தவும், ஏழைகளை நசுக்கவும் ஆளும் பாஜக அரசு செயல்படுவதாக அவர் பிரதமர் மோடியை கடுமையாக தாக்கி பேசினார்.

இதனையடுத்து நேற்று மாலை உத்தரப் பிரதேசத்தில் முடிந்த யாத்திரை, மீண்டும் ஹரியானாவில் நுழைந்தது. இந்த யாத்திரை இன்று (ஜனவரி 5) முதல் 10-ஆம் தேதி வரை மாநிலத்தின் நான்கு மாவட்டங்கள் வழியாகச் செல்லும் என்று கூறப்பட்டுளள்து.

இந்நிலையில் வெள்ளிக்கிழமையான இன்று காலை சனோலி-பானிபட் சாலையில் இருந்து பாரத் ஜோடோ யாத்ரா, மீண்டும் தொடங்குகிறது. பின்னர் மதியம், காங்கிரஸ் கட்சி சார்பில் பானிபட்டில் நடைபெறும் ஒரு பொதுக் கூட்டதத்தில் கலந்துகொண்டு, அதில் ராகுல் காந்தி உரையாற்ற உள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

தமிழகத்தில் 5 நாட்கள் மழைக்கு வாய்ப்பு

G SaravanaKumar

உறவினரை 10 துண்டுகளாக வெட்டிக் கொன்ற இளைஞர் கைது – ஜெய்ப்பூரில் அதிர்ச்சி சம்பவம்

EZHILARASAN D

திருடப்பட்ட கவரிங் செயினை தங்கம் என்று போலீசில் புகாரளித்த பெண்!