இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற 2வது டி20 போட்டியில் அர்ஷ்தீப் சிங், இரண்டே ஓவர்களை வீசி 5 நோ பால்களுடன் 37 ரன்களை இலங்கைக்கு வாரி வழங்கினார். இது ரசிகர்களை பெரும் அதிருப்தியில் ஆழ்த்தியது.
இந்தியா- இலங்கை அணிகளுக்கிடையிலான 2வது டி20 போட்டி புனேவில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதில் முதல் போட்டியில் பங்கேற்காத அர்ஷ்தீப் சிங், இந்த போட்டியில் பிளேயிங் லெவனில் இடம்பெற்றார்.
டி20 உலகக்கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக முக்கிய விக்கெட்டுகளை எடுத்து அசத்திய அவர், கடைசி கட்ட ஓவர்களையும் அற்புதமாக வீசும் திறம் பெற்று வந்தார். இதனால் இந்திய டி20 அணிக்கு முக்கிய பந்துவீச்சாளராக திகழ்வார் என அனைவராலும் பேசப்பட்டு வந்தார்.
பந்துவீச்சில் பல்வேறு திறமைகளை கொண்ட அவர், இலங்கைக்கு எதிரான இந்த டி20 போட்டியில் செய்ததோ வேறு. இலங்கைக்கு எதிரான போட்டியின் இரண்டாவது ஓவரை வீச வந்த அவர், ஒரே ஓவரில் 3 நோ பால்களை வீசினார். அத்துடன் அந்த ஓவரில் மட்டும் 19 ரன்களை வழங்கினார். இதனால், அவர் மீது நம்பிக்கை இழந்தது போல் கானப்பட்ட கேப்டன் ஹர்திக் பாண்டயா, அவருக்கு மீதமுள்ள 4 ஓவர்களையும் வீசுவதற்கு வாய்ப்பு வழங்கவில்லை.
https://twitter.com/cricketfanvideo/status/1611062010514636801
இறுதியில் 19வது ஓவரை வீச வந்த அர்ஷ்தீப் சிங், அந்த ஓவரிலும், 2 நோ பால்களை வீசினார். அத்துடன், 18 ரன்களையும் வாரி வழங்கினார். இரண்டே ஓவர்களை வீசி 5 நோ பால்களுடன் 37 ரன்களை வாரி வழங்கிய அர்ஷ்தீப் சிங்கை பல்வேறு தரப்பினர் விமர்சனம் செய்து வருகின்றனர்.
நேற்று நடைபெற்ற இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையேயான டி20 போட்டியில் போராடி தோல்வியடைந்தது. இந்த போட்டியில் அக்சர் படேல் மற்றும் சூர்யகுமார் யாதவ் அதிரடியாக ஆடி பந்துகளை நான்கு புறமும் சுழற்றியடித்தனர். ஆனால் அவர்களின் அதிரடியான ஆட்டம் இறுதியில் வீண்போனது என்றே கூற வேண்டும். இதையடுத்து இந்த தொடரில் 1-1 என்ற நிலையில் இரு அணிகளும் சமநிலையில் உள்ளன.







