காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று முதல் விருப்ப மனு விநியோகம்!

காங்கிரஸ் சார்பில் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களிடம் இன்று முதல் அக்கட்சி விருப்ப மனுக்களை பெற தொடங்கியுள்ளது. வருகிற சட்டமன்றத் தேர்தலில் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் வேட்பாளராகப் போட்டியிட விருப்பம் தெரிவிக்கும் காங்கிரஸ்…

காங்கிரஸ் சார்பில் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களிடம் இன்று முதல் அக்கட்சி விருப்ப மனுக்களை பெற தொடங்கியுள்ளது.

வருகிற சட்டமன்றத் தேர்தலில் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் வேட்பாளராகப் போட்டியிட விருப்பம் தெரிவிக்கும் காங்கிரஸ் கட்சியினரிடமிருந்து 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இன்று முதல் விருப்ப மனுக்கள் பெறப்படுகின்றன.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்கள் வரும் மார்ச் 5ஆம் தேதிக்குள், சென்னை, சத்தியமூர்த்தி பவனில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுத் தொகுதிகளுக்கு ஐந்தாயிரம் ரூபாயும், தனித்தொகுதிகள் மற்றும் மகளிருக்கு இரண்டாயிரத்து 500 ரூபாயும் விண்ணப்பக் கட்டணமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.