முக்கியச் செய்திகள் இந்தியா

“கல்வி, ஆன்மீகம், சுற்றுலா மையமாக புதுச்சேரி திகழும்” -பிரதமர் மோடி!

புதுச்சேரியில் பல்வேறு திட்டப்பணிகளை தொடக்கி வைப்பதற்காக வருகை தந்திருந்த பிரதமர் நரேந்திர மோடி, பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியை கடுமையாக சாடியுள்ளார்.

தற்போதுதான் பல மேம்பாட்டு திட்டங்கள் துவக்கி வைக்கப்பட்டுள்ளன, இத்திட்டங்களுக்காக புதுச்சேரி மக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன் என்றும் மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். மேலும், காங்கிரஸ் ஆட்சியில் இருந்து புதுச்சேரி மக்களுக்கு விடுதலை கிடைத்ததால் தான் மகிழ்ச்சியாக உள்ளதாகவும் கூறியுள்ளார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

“2016ல் மிகப்பெரிய நம்பிக்கையோடு கங்கிரஸீக்கு வாக்களித்தார்கள், தற்போது மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். உங்களுக்கு முதல்வராக இருந்தவர் கட்சி தலைவரின் காலனியை எடுப்பதில் வல்லவராக இருந்தார் ஆனால் புதுச்சேரி மக்களுக்காகவும், மாநில முன்னேற்றத்துக்காகவும் எதுவும் செய்யவில்லை.” என குற்றசாட்டியுள்ளார்.

“புதுச்சேரியில் காங்கிரஸ் அரசு அனைத்து நிர்வாகத்தையும் சீரழிந்து உள்ளது. அதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு, சில தினங்களுக்கு முன் சமூக வலைத்தளங்களில் பரவிய வீடியோதான். அதில் நாராயணசாமியின் அரசு பற்றி ஒரு பெண் குற்றம் சாட்டியுள்ளார். ஆனால், அவர் ராகுல் காந்தியிடம் அந்த குற்றச்சாட்டை மாற்றி மொழிப்பெயர்த்து பொய் சொல்லியிருக்கிறார். கட்சி தலைவரையே ஏமாற்றும் அவர் மக்களை எப்படி எல்லாம் ஏமாற்றி இருப்பார்?” என்றும் கேள்வியெழுப்பியுள்ளார்.

மேலும், வர்த்தகம், கல்வி, ஆன்மீகம், சுற்றுலா மையமாக புதுச்சேரி திகழும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

பாஜக நிர்வாகி வெட்டிக்கொலை – கர்நாடகாவில் பதற்றம்

Mohan Dass

நளினி, முருகனுக்கு 30 நாட்கள் மட்டுமே விடுப்பு அளிக்க முடியும்: அமைச்சர் ரகுபதி

Gayathri Venkatesan

பொறியியல் மாணவர்களுக்கான மறுதேர்வு: அண்ணா பல்கலைக்கழகம்!

Vandhana