கையை விட்டு, ஹெல்மெட் அணியாமல் பைக் ஓட்டிய காங்கிரஸ் எம்.பி ஆதிர் ரஞ்சன் சவுத்ரி..

காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஹெல்மெட் அணியாமல் வாகனத்தில் சாகச பயணம் செய்தது விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளது. மேற்கு வங்க மாநிலம், பெர்ஹாம்பூர் பகுதியில், காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பைக் ஒன்றில்…

காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஹெல்மெட் அணியாமல் வாகனத்தில் சாகச பயணம் செய்தது விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளது.

மேற்கு வங்க மாநிலம், பெர்ஹாம்பூர் பகுதியில், காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பைக் ஒன்றில் பயணம் மேற்கொண்டார். அப்போது அவர் ஹெல்மெட் அணியாமல் சென்றதுடன் கைகளை விட்டபடி, சாகசம் செய்தவாறு சென்றார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. எம்.பி.யின் இந்த செயல் விமர்சனத்துக்கு உள்ளானது.

இதுதொடர்பாக, செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதற்காக போலீசார் அபராதம் விதித்தால் தமக்கு பிரச்னை ஒன்றும் இல்லை என தெரிவித்தார். பைக் ஓட்டிச் சென்றபோது, அப்பகுதியில் யாரும் இல்லை என தெரிவித்த ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, நீண்டகாலத்திற்கு பிறகு பைக்கில் பயணம் செய்ததாக கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.