உதகை மலை ரயிலுக்கு 116-வது பிறந்த நாள் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில், 1899-ம் ஆண்டு ஜூன் 15-ம் தேதி மேட்டுப்பாளையம் – குன்னூர் இடையே மலை ரயில் இயக்கப்பட்டது. 1909-ம் ஆண்டு அக்டோபர் 15-ம் தேதி இந்த சேவை, உதகை வரை நீட்டிக்கப்பட்டது. இதன் அடிப்படையில், ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 15-ம் தேதி நீலகிரி மலை ரயில் நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன்படி, இன்று 116வது பிறந்த நாள் விழா உதகை ரயில் நிலையத்தில் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியின்போது, நீலகிரி மலை ரயில் அறக்கட்டளை நிறுவனர் நடராஜ் தலைமையில் நிர்வாகிகள், சுற்றுலா பயணிகளுக்கு மலர் கொடுத்து வரவேற்றனர். இதனை தொடர்ந்து கேக் வெட்டப்பட்ட நிலையில், தோடர் இன மக்கள் அவர்களது பாரம்பரிய மொழியில் பாடல் பாடி, நடனமாடினர்.







