சென்னை, டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள கொரோனா கட்டளை மையத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.
கொரோனா சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகளில், வெண்டிலேட்டர் வசதிகள், ஆக்ஸிஜன் படுக்கை வசதிகளை ஒருங்கிணைக்கும் இடம் வார் ரூம் எனப்படும் கொரோனா கட்டளை மையமாகும். சென்னையில் டி.எம்.எஸ் வளாகத்தில் கொரோனா கட்டளை மையம் செயல்பட்டு வருகிறது.
இந்த மையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்றிரவு ஆய்வு மேற்கொண்டார். அப்போது, தமிழகம் முழுவதிலும் உள்ள அரசு மருத்துவமனைகளில் உள்ள ஆக்ஸிஜன் மற்றும் வெண்டிலேட்டர் வசதிகள் குறித்து அவர் கேட்டறிந்தார். பின்னர், கொரோனா கட்டளை மையத்திற்கு வரும் அழைப்புகளை ஏற்று, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.







