தமிழகத்தில் முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், தமிழக அரசு அறிவித்துள்ள புதிய கட்டுப்பாடுகள் இன்று அமலுக்கு வந்துள்ளன.
- காய்கறி, மளிகை மற்றும் இறைச்சிக் கடைகள் காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே இயங்கலாம் எனக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
- இன்று முதல் தேநீர் கடைகள் இயங்க அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
- காய்கறி, பழங்கள், பூக்கள் விற்பனை செய்யும் நடைபாதை கடைகளுக்கு இன்று முதல் அனுமதி இல்லை என கூறப்பட்டுள்ளது.
- ஏடிஎம், பெட்ரோல் பங்குகள், மருந்தகங்கள், நாட்டு மருந்துக் கடைகள் வழக்கம்போல் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- வரும் திங்கள் கிழமை முதல் மாவட்டத்திற்கு உள்ளேயும் வெளியேயும் பயணம் செய்ய இ-பதிவு கட்டாயம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- திருமணம், இறப்பு போன்ற நிகழ்ச்சிகளில் மாவட்டத்திற்கு உள்ளேயும் வெளியேயும் செல்ல இ-பதிவு கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- வீடுகளுக்கு பொருட்களை விநியோகிக்கும் மின் வணிக நிறுவனங்கள், பிற்பகல் 2 மணி முதல் மாலை 6 மணி வரை இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
- மளிகை, காய்கறிகள் உள்ளிட்ட பொருட்களை வாங்க பொதுமக்கள் அதிக தூரம் செல்ல கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- மேலும் ஞாயிற்றுக் கிழமைகளில் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு வரும் 23-ஆம் தேதி வரை தொடர்ந்து அமலில் இருக்கும் எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.







