முதலமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்கு நடிகர் அஜித்குமார் ரூ.25 லட்சம் வழங்கியுள்ளார்.
தமிழகத்தில் கொரோனா 2-வது அலையின் தாக்கம் ஒவ்வொரு நாளும் அதிகரித்தவருகிறது. நேற்று ஒரே நாளில் மட்டும் 30,621 பேர் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று மட்டும் 297 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அனைத்து தரப்பட்ட மக்களும் கொரோனா நிவாரண நிதி வழங்கவேண்டும் என கேட்டுக்கொண்டார்.
முதல்வரின் கோரிக்கையை ஏற்று பல்வேறு தரப்பினரும் நிதி அளித்துவரும் நிலையில், நடிகர் அஜித்குமார் ரூ.25 லட்சம் கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார். இந்த தொகையை வங்கி பரிவர்த்தனை மூலமாக அவர் அனுப்பியுள்ளார்.
இதேபோல் கடந்த ஆண்டும் கொரோனா நிவாரண நிதியாக பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சம், முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ. 50 லட்சம் மற்றும் ஃபெப்ஸி ஊழியர்களுக்கு ரூ.25 லட்சம் என மொத்தம் ரூ. 1 கோடியே 25 லட்சத்தை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.







