நடிகர் அஜித்தை செல்போனில் வீடியோ எடுத்த விவகாரத்தில் மருத்துவமனையைச் சேர்ந்த பெண் ஊழியர் ஒருவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில், சாலிகிராமம் பகுதியைச் சேர்ந்த பர்ஜானா என்பவர் மருத்துவர்களுக்கான ஒருங்கிணைப்பாளராக பணியாற்றி வந்துள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் கடந்த 2020ஆம் ஆண்டு மே மாதம் கொரோனா பரவல் நேரத்தில் அந்த மருத்துவமனைக்கு தனது மனைவி ஷாலினியுடன் நடிகர் அஜித் பரிசோதனைக்கு சென்றுள்ளார். அப்போது அவரது ரசிகரான பர்ஜானா, அஜித்தை செல்போனில் வீடியோ எடுத்துள்ளார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் கசிந்த நிலையில், நடிகர் அஜித்திற்கு கொரோனாவா? என்ற கேள்விக்குறியுடன் சிலர் வைரலாக்கினார். இதையடுத்து பர்ஜானாவை மருத்துவமனை நிர்வாகம் பணி இடைநீக்கம் செய்தது.
அதையடுத்து பர்ஜானா, நடிகை ஷாலினியை தொடர்பு கொண்டு தனது பணியில் ஏற்பட்ட சிக்கல் குறித்து எடுத்துரைத்துள்ளார். இதனால் ஷாலினி வேண்டுகோளுக்கு இணங்க மீண்டும் மருத்துவமனை நிர்வாகம் பர்ஜானாவை பணியில் சேர்த்து கொண்டாலும் எந்த வேலையும் கொடுக்காமல் இருந்ததாக தெரிகிறது. பிறகு அதை தொடர்ந்து பணி நீக்கம் செய்துள்ளது. இதனால் மனமுடைந்த பர்ஜானா, நடிகர் அஜித்தின் மனைவி ஷாலினியிடம் மன்னிப்பு கேட்டு முறையிடும் ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.