முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

சேலத்திலிருந்து நாளை முதல் மீண்டும் தேர்தல் பரப்புரையை தொடங்கும் முதல்வர்!

சேலம் மாவட்டம் வாழப்பாடியில் இருந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நாளை முதல் மீண்டும் தேர்தல் பரப்புரையை தொடங்குகிறார்.

தமிழக சட்டமன்றத் தேர்தலையொட்டி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த ஜனவரி மாதம் தனது பரப்புரையை தொடங்கினார். அதனைத் தொடர்ந்து தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் சூறாவளி பரப்புரையை முதலமைச்சர் பழனிசாமி மேற்கொண்டு வந்தார்.

இதனிடையே தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டதால், அதிமுக கூட்டணி கட்சிகள் இடையே பேச்சுவார்த்தை நடத்தி தொகுதி உடன்பாடு ஏற்பட்டு வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்நிலையில் நாளை மாலை முதல் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பரப்புரையை மேற்கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை மாலை சேலம் மாவட்டம் வாழப்பாடியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பரப்புரையை தொடங்குகிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement:
SHARE

Related posts

முதலமைச்சரின் சைக்கிள் பயணம்

Gayathri Venkatesan

நீலகிரியில் ஆட்டோ ஆம்புலன்ஸ் சேவையில் ஈடுபடும் ராதிகா: பிரதமர் மோடி பாராட்டு

Vandhana

அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் உடல் தகனம்

Jeba Arul Robinson