உணவை தாமதமாக கொண்டுவந்த சொமாட்டோ ஊழியருடன் நடந்த வாக்குவாதத்தில் பெண் வாடிக்கையாளர் தாக்கப்பட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
பெங்களூரைச் சேர்ந்த ஹிட்டாச்சா சந்ரேன் என்ற பெண் சொமாட்டோ செயலி மூலம் மாலை 3.30 மணியளவில் உணவை ஆடர் செய்துள்ளார். ஆடர் செய்த உணவு வெகு நேரம் ஆகியும் வீடுக்கு வந்தடையாததால், வாடிக்கையாளர் சேவை மையத்திற்கு புகார் தெரிவித்துள்ளார்.

இந்நேரத்தில் உணவை டெலிவரி செய்யும் ஊழியர் அவர் வீட்டின் கதவை தட்டியுள்ளார். ஆடர் செய்த உணவை காலதாமதமாக கொண்டு வந்தது தொடர்பாக, ஹிட்டாச்சாவுக்கும் ஊழியருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அவர் ஹிட்டாச்சாவை தீடீரென தாக்கியுள்ளார். இதனால் மூக்கில் ரத்தம் சொட்டச் சொட்ட ஹிட்டாச்சா சந்ரேன் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக சோமாட்டோ நிறுவனம் வருத்தம் தெரிவித்துள்ளது. சமந்தப்பட்ட நபரை பணிநீக்கம் செய்துவிட்டதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.







