திமுக கூட்டணியில் கொமதேக, மமக ஆகிய கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு!

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருந்த 3 தொகுதிகள் எவை எவையென தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், அதிமுக, திமுக…

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருந்த 3 தொகுதிகள் எவை எவையென தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், அதிமுக, திமுக ஆகிய கட்சிகள் தங்கள் கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்கீடு செய்து, தற்போது அவை எந்தெந்த தொகுதி என உறுதி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், தற்போது திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி மற்றும், மனிதநேய மக்கள் கட்சி ஆகிய இரு கட்சிகளுக்கும் ஏற்கெனவே ஒதுக்கப்பட்ட தொகுதிகளின் எண்ணிக்கையின்படி அவை எந்தெந்த தொகுதிகள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி சூலூர், பெருந்துறை, திருச்செங்கோடு ஆகிய தொகுதிகளும், மனிதநேய மக்கள் கட்சிக்கு பாபநாசம், மணப்பாறை ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உறுதி செய்யப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.