திருத்தணி முருகன் கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது!!

திருத்தணி, சுப்பிரமணிய சுவாமி கோயிலில், சித்திரைப் பெருவிழா, கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி முருகன் கோயிலில், ஆண்டுதோறும் சித்திரை திருவிழா ,வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், நடப்பாண்டுக்கான சித்திரை பெருவிழா…

திருத்தணி, சுப்பிரமணிய சுவாமி கோயிலில், சித்திரைப் பெருவிழா, கொடியேற்றத்துடன் தொடங்கியது.

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி முருகன் கோயிலில், ஆண்டுதோறும் சித்திரை திருவிழா ,வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், நடப்பாண்டுக்கான சித்திரை பெருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது.

இன்று தொடங்கி 12 நாட்கள் வரை நடைபெற உள்ள இந்த சித்தரை பெருவிழாவாக மலை கோயிலில் நடைபெற உள்ளது. இதற்காக மலைக் கோயிலில் உள்ள கொடிமரத்திற்கு, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இதனை தொடர்ந்து, உற்சவர் முருகப்பெருமான் வள்ளியம்மை மற்றும் தெய்வானை தாயாருடன் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்தார். இந்த நிகழ்ச்சியில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு, சாமி தரிசனம் செய்தனர்.

மலைக்கோயிலில் ஒவ்வொரு நாளும் காலை மற்றும் மாலை வேலைகளில் வெள்ளி, சூரிய பிரபை வாகனம், சிம்ம வாகனம், பல்லக்கு சேவை, அன்ன வாகனம், புலி வாகனம், திருத்தேர், பூத வாகனம், ஆட்டுக்கிடாய் வாகனம், வெள்ளி நாக வாகனம், வெள்ளி மயில் வாகனம், யானை வாகனம், யாளி வாகனம், போன்ற சேவைகள் நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திருக்கோயில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.

பி.ஜேம்ஸ் லிசா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.