500 டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கான கணக்கெடுக்கும் பணிகள் தொடக்கம்!

சட்டப்பேரவையில் அறிவித்தபடி, 500 டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கான கணக்கெடுக்கும் பணிகள் தொடங்கியது. தமிழ்நாடு சட்டப்பேரவையில், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை மீதான மானிய கோரிக்கையின்போது, தமிழ்நாட்டில் 5,329 மதுபான சில்லரை விற்பனை கடைகள் செயல்பட்டு…

சட்டப்பேரவையில் அறிவித்தபடி, 500 டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கான கணக்கெடுக்கும் பணிகள் தொடங்கியது.

தமிழ்நாடு சட்டப்பேரவையில், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை மீதான மானிய கோரிக்கையின்போது, தமிழ்நாட்டில் 5,329 மதுபான சில்லரை விற்பனை கடைகள் செயல்பட்டு வரும் நிலையில், அதில் தகுதியான 500 மதுபான சில்லரை விற்பனை கடைகள் கண்டறியப்பட்டு மூடப்படும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்திருந்தார்.

இதையும் படியுங்கள் : மே 7ம் தேதிக்குப் பின் +2 பொதுத்தேர்வு முடிவுகள்! – அமைச்சர் அன்பில் மகேஸ் தகவல்

அந்த அறிவிப்பை செயல்படுத்தும் விதமாக எந்தெந்த கடைகளை மூடுவது என்பது தொடர்பான நடவடிக்கைகளை தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் மேற்கொண்டு வருகிறது.

50 மீட்டர்களுக்கு இடையே இருக்கக்கூடிய மதுபானக் கடைகள், வருவாய் குறைவாக உள்ள கடைகள், பள்ளி, கோயில்கள் அருகில் உள்ள கடைகள் உள்ளிட்ட காரணிகளின் அடிப்படையில் 500 கடைகள் கணக்கெடுக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. கணக்கெடுப்பிற்கு பின் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு 500 மதுபானக்கடைகளை மூடப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.