புனித யாத்திரையை முன்னிட்டு கேதார்நாத் கோயில் நடை திறப்பு!!

புனித யாத்திரையையொட்டி உத்தரகாண்ட்டில் உள்ள கேதார்நாத் கோயில் நடை திறக்கப்பட்டது. உத்தரகாண்ட்டில் உள்ள புகழ்பெற்ற பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி, யமுனோத்ரி கோயில்களுக்கு ஆண்டுதோறும் புனித யாத்திரையை பக்தர்கள் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், நடப்பாண்டுக்கான…

புனித யாத்திரையையொட்டி உத்தரகாண்ட்டில் உள்ள கேதார்நாத் கோயில் நடை திறக்கப்பட்டது.

உத்தரகாண்ட்டில் உள்ள புகழ்பெற்ற பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி, யமுனோத்ரி கோயில்களுக்கு ஆண்டுதோறும் புனித யாத்திரையை பக்தர்கள் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், நடப்பாண்டுக்கான சார்தாம் யாத்திரை அட்சயதிருதியை அன்று தொடங்கப்பட்டது.

முதற்கட்டமாக ஹரித்வாரில் இருந்து புறப்பட்ட பக்தர்கள் அதிகாலை கேதார்நாத் வந்தடைந்தனர். சார்தாம் யாத்திரையையொட்டி கோயில் முழுவதும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த நிலையில், மேள தாளங்கள் முழங்க கோயில் வாசல் திறக்கப்பட்டது. அப்போது பக்தர்கள் ஓம் நமச்சிவாயா என பக்தி முழக்கம் எழுப்பினர்.

இதையும் படியுங்கள் : 500 டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கான கணக்கெடுக்கும் பணிகள் தொடக்கம்!

இருப்பினும் கோயில் செல்லும் பாதையில் கடும் பனிப்பொழிவு காணப்படுவதால் புனித யாத்திரையை உத்தரகாண்ட் அரசு நிறுத்தி வைத்துள்ளது. கேதார்நாத் கோயிலுக்கு செல்லும் பாதையில் ஒரு வாரத்திற்கு கடும் பனிப்பொழிவு காணப்படும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், யாத்திரைக்கான விண்ணப்பங்களை உத்தரகாண்ட் அரசு நிறுத்தி வைத்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.