டாஸ்மாக் திறக்கப்பட்டது ஏன்? முதலமைச்சர் விளக்கம்!

டாஸ்மாக் திறக்கப்பட்டது ஏன் என்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார். போலி மது, கள்ள மது மக்களை சீரழிக்கக் கூடாது என்பதற்காகவே டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதாகவும், கொரோனா தடுப்பு விதிமுறைகள் மீறப்பட்டால் உத்தரவு…

டாஸ்மாக் திறக்கப்பட்டது ஏன் என்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார். போலி மது, கள்ள மது மக்களை சீரழிக்கக் கூடாது என்பதற்காகவே டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதாகவும், கொரோனா தடுப்பு விதிமுறைகள் மீறப்பட்டால் உத்தரவு திரும்ப பெறப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கட்டுப்படுவோம்! கட்டுப்படுத்துவோம்! வீடியோ மூலம் பொதுமக்களுக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது,“மக்கள் கூட்டம் கூட்டமாக கூடுவதை தவிர்க்க வேண்டும். தமிழ்நாட்டில் கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டுவர மக்களின் ஒத்துழைப்பு அவசியம். முழு ஊரடங்கு விதிமுறைகளை பின்பற்றிய மக்களுக்கு நன்றி.

மேலும், கொரோனா பரவலுக்கு இன்னும் முழுமையாக முற்றுப்புள்ளி வைக்கப்படவில்லை, தளர்வுகள் அறிவிக்கப்பட்டது என மக்கள் அலட்சியமாக சுற்றித்திரிய வேண்டாம்.

பல்வேறு விமர்சனங்களுக்கு மத்தியில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளது. போலி மது, கள்ள மது மக்களை சீரழிக்கக் கூடாது என்பதற்காகவே டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன கொரோனா தடுப்பு விதிமுறைகள் மீறப்பட்டால் உத்தரவு திரும்ப பெறப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

விரைவில் பொது போக்குவரத்து சேவை தொடங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.