முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்!

மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்தநாளை, வீட்டிலேயே கொண்டாடுமாறு அக்கட்சித் தொண்டர்களுக்கு, முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், வரும் 3-ம் தேதி, தாய்மொழி தமிழுக்கு செம்மொழி தகுதியை பெற்றுத் தந்த கருணாநிதியின் பிறந்தநாள் என்றும், ஊரடங்கு காலம் என்பதால், பொதுவெளியில் பிறந்தநாள் நிகழ்ச்சிகளை நடத்த வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். கருணாநிதியின் பிறந்தநாளில், திமுகவினர் கட்டுப்பாடு காக்க வேண்டும் என்றும், அவரவர் இல்லங்களிலேயே, கருணாநிதியின் உருவப்படத்தை வைத்து மரியாதை செலுத்தி, பிறந்தநாளை கொண்டாட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

மேலும், கருணாநிதியின் கொள்கைகளை நெஞ்சில் ஏந்தி, ஏழை, எளிய மக்களுக்கு, அவர்களின் இருப்பிடம் தேடிச் சென்று, உணவு உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ள மு.க.ஸ்டாலின், மக்கள் நலன் காத்து பேரிடரை வெல்வோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

திமுக ஆட்சி அமைந்த முதல் ஆண்டில் கருணாநிதியின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாட இயலவில்லையே என்ற ஏக்கம் இருந்தாலும், அடுத்த 5 ஆண்டுகளும் திமுக ஆட்சி தான் என்பதால், அடுத்து வரும் ஆண்டுகளில், அவரது பிறந்தநாளை பெருமகிழ்ச்சியுடன் கொண்டாடுவோம், என்றும் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

5 மாநில தேர்தலில் பாஜகவே வெற்றிபெறும்; மாநில தலைவர் அண்ணாமலை

G SaravanaKumar

விச்சு- மேரி காதலுக்கு 40 வருஷம்: கவுதம் கார்த்திக் வெளியிட்ட ஸ்பெஷல் போஸ்டர்

Vandhana

மேற்கு வங்கத்தில் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு முதல்வர் மமதா ஆறுதல்

G SaravanaKumar