முக்கியச் செய்திகள் தமிழகம்

டாஸ்மாக் கடைகள் செயல்பட அனுமதி!

தொற்று குறைந்த மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளை செயல்பட அனுமதியளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் மே 24ஆம் தேதி முதல் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. அதற்கு முன்பு இருந்தே மே 10 ஆம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டால் கள்ளச்சாராயம் விற்பனை பெருக ஆரம்பித்தது. கள்ளச்சாராயம் விற்பனை செய்தவர்களை காவல் துறையினர் கைது செய்த நிகழ்வும் நடந்தது.

இதனிடையே வரும் 14ஆம் தேதியுடன் ஊரடங்கு முடிவடையவுள்ள நிலையில், கூடுதல் தளர்வுகள் அளிப்பது தொடர்பாக நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டது. அதில், தொற்று குறைந்த மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளை திறக்கலாம் என்பது உள்ளிட்ட தளர்வுகளை அதிகாரிகள் பரிந்துரைத்தனர். ஆனாலும், டாஸ்மாக் கடைகளை திறக்கக் கூடாது என பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் உள்ளிட்டோர் வலியுறுத்தினர்.

இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், முழு ஊரடங்கை ஏப்ரல் 14 முதல் 21ஆம் தேதி வரை மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிப்பு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொற்று அதிகமுள்ள 11 மாவட்டங்களைத் தவிர மீதமுள்ள 27 மாவட்டங்களுக்கு பல்வேறு தளர்வுகளும் அளிக்கப்பட்டுள்ளது.

அதில், டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்குப் பிறகு டாஸ்மாக் கடைகள் திறக்கப்படவுள்ளது.

Advertisement:

Related posts

மம்தா பேனர்ஜிக்கும் சோசலிசத்திற்கும் திருமணம்!

தமிழகம் முழுவதும் பொங்கல் பரிசு பெறுவதற்கான் டோக்கன் இன்று முதல் வழங்கப்படுகிறது!

Nandhakumar

மு.க ஸ்டாலினுக்குப் பன்னீர் செல்வம் வாழ்த்து!

Karthick