தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் வருகின்ற ஆகஸ்ட் 5-ஆம் தேதி கூடுகிறது. இதில் 2026-27-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய் நாள் தோறும் பல்வேறு துறை அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் துறை செயல்பாடுகள் மற்றும் மேம்பாடு குறித்து ஆய்வுக் கூட்டங்களை நடத்தி வருகிறார்.
அந்த வலையில் இன்று முதலமைச்சர் விஜய் சட்டத்துறை, சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை ஆகிய துறைகளின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில் உள்ளூர் நீதி மன்றம், அரசு வழக்கறிஞர்கள், கட்டணமில்லா சட்ட ஆலோசகர்களுக்கு கெளரவ நிதி வழங்குதல், சிறைக் கைதிகளுக்கான அடிப்படை கட்ட்டமைப்பு மேம்பாடுகள், சிறை மரணங்கள் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை மேற்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இக்கூட்டத்தில் எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார், நிதி, திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை அமைச்சர் மரிய வில்சன், தலைமைச் செயலாளர் முனைவர் மு. சாய்குமார், உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மணிவாசன், நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மு.அ.சித்திக், சட்டத்துறைச் செயலாளர் சுமதி மற்றும் துறைத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.




