மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான காட்டன் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெடு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியாகியுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
காலிப்பணியிடங்கள் : மொத்தம் 148 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.
- உதவி மேலாளர் (அலுவல் மொழி) – 1
- உதவி மேலாளர் (தகவல் தொழில்நுட்பம்) – 1
- மேலாண்மை பயிற்சியாளர் (மார்க்கெட்டிங்) – 8
- மேலாண்மை பயிற்சியாளர் (கணக்கியல்) – 8
- ஜூனியர் கமர்ஷியல் எக்ஸிகியூட்டிவ் – 50
- ஜூனியர் உதவியாளர் (கணக்கியல்) – 50
- ஜூனியர் உதவியாளர் (பொது) – 30
கல்வித் தகுதி
- டிகிரி முடித்தவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க முடியும்.
- பி.காம்., பி.எஸ்சி (வேளாண்மை), பி.இ., பி.சி.ஏ., எம்.பி.ஏ., எம்.சி.ஏ., சிஏ., சிஎம்ஏ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு:
- 24.07.2026 அன்று தேதிப்படி வயது வரம்பு கணக்கிடப்படும்.
- அதன்படி, உதவி மேலாளர் பணிக்கு மட்டும் அதிகபட்சம் 32 வயதுக்குள் இருக்க வேண்டும். மற்ற அனைத்து பணிகளுக்கும் அதிகபட்சம் 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.
- எஸ்சி, எஸ்டி பிரிவினர் 5 ஆண்டுகள் தளர்வும், ஓபிஎசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் தளர்வுகள் அளிக்கப்படும்.
சம்பளம்
- உதவி மேலாளர் – ரூ.40,000 – ரூ.1,40,000
- மேலாண்மை பயிற்சியாளர் – ரூ.30,000 – ரூ.1,20,000
- ஜூனியர் பணியிடங்கள் – ரூ.22,000 – ரூ.90,000
தேர்வு முறை:
- எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்:
- பொதுப்பிரிவினர் ரூ.1,770 விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும்.
- எஸ்சி, எஸ்டி, முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளிகள் விண்ணப்ப கட்டணமாக ரூ.590 செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
- ஆர்வமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
முக்கிய தேதிகள்
- ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கும் நாள்: 09.07.2026 ஆகும்.
- விண்ணப்பிக்க கடைசி நாள்: 24.07.2026 ஆகும்.




