காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் வெளியிட்டுள்ள எக்ஸ்தளப்பதிவில் கூறியிருப்பதாவது, “இரு மொழிக் கொள்கையை வலியுறுத்தும் தமிழ்நாடு அரசின் முதலமைச்சர் விஜய் அவர்களின் ஆங்கிலப் பேச்சை முதன் முறையாகக் கேட்டேன் சரளமாக ஆங்கிலம் பேசுகிறார்; ஆங்கிலச் சொற்களை சரியாக உச்சரிக்கிறார். மிக்க மகிழ்ச்சி” என்று தெரிவித்துள்ளார்,
மேலும் மற்றொரு பதிவில், “இருமொழிக் கொள்கையை ஆதரிப்பவர்கள் எல்லோரும் — குறிப்பாக இளம் மாணவர்கள் தமிழ், ஆங்கிலம் என்ற இரு மொழிகளையும் சரளமாகப் பேசவேண்டும், உச்சரிக்க வேண்டும் என்பது என் விருப்பம்
எல்லாப் பள்ளிகளிலும் பயிற்சி பெற்ற தமிழ் ஆசிரியர்களை மற்றும் ஆங்கில ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்
இரு மொழிக் கொள்கை ஏட்டளவில் மட்டும் இருக்கக் கூடாது. தமிழகம் முழுவதும் நடைமுறைக்கு வர வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.




