பெண் பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்ட விவகாரம் : உச்ச நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தாக்கல்!

அவசர வழக்காக எடுத்து இன்றே விசாரணை செய்யவேண்டும் என்ற கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்தது.

வாக்குத்திருட்டு, SIR முறைகேடுகள், தலைமைத்தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகல் ஆகியவற்றை முன்னிறுத்தி தலைநகர் டெல்லியில், எதிர்க்கட்சியினரும், மாணவ அமைப்புகளும்,பல்வேறு பேராட்டங்களை நடத்தி வருகிறார்கள். டெல்லியில் போராட்டம் நடைபெறும் இடங்களில் ஜந்தர் மந்தர் குறிப்பிடத்தக்கது. ஜந்தர் மந்தரில் நடைபெறும் போராட்டத்தின் போது செய்தி சேகரிக்க செல்லும் பத்திரிகையாளர்களை தாக்கவோ, கைது செய்யவோ கூடாது என உச்ச நீதிமன்றம் தடை விதித்த நிலையில் அந்த உத்தரவை மீறி காவல் துறையினர் செயல்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது..

பெண் பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது, பத்திரிகையாளர்கள் பலர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள், எனவே இது தொடர்பாக காவல்துறையின் மீது அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கை இன்றே விசாரணைக்கு எடுக்க வேண்டும் என்று மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன், தலைமை நீதிபதி சூரியகாந்த் அமர்வு முன்பு முறையிட்டார்

அப்போது தலைமை நீதிபதி , இன்று போராட்ட தொடர்பான பல்வேறு வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட உள்ள நிலையில், அவமதிப்பு நடவடிக்கைக் கோரிய இந்த வழக்கை நாளைய தினம் விசாரணை எடுத்துக் கொள்வதாக தெரிவித்தார். அதற்கு மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கர் நாராயணன் முன்னுரிமை கொடுத்து இந்த வழக்கை விசாரணை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

அதனை ஏற்றுக் கொண்ட தலைமை நீதிபதி சூர்ய காந்த் நிச்சயம் முன்னுரிமை கொடுத்து வழக்கு விசாரணை செய்யப்படும் என்று உறுதியளித்து, அவமதிப்பு நடவடிக்கை கோரிய வழக்கை நாளைய தினம் (அக்.14) விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாகவும் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.