“இந்தியாவின் வளர்ச்சி ‘உலகின் வளர்ச்சியுடன் இணைந்தது, யாருடைய இழப்பிலும் அல்ல!” – பிரதமர் மோடி

இந்தியாவின் வளர்ச்சி ‘உலகின் வளர்ச்சியுடன் இணைந்தது, பிறருக்கு இழப்பை ஏற்படுத்திஅல்ல என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்

டெல்லியில் பொருளாதாரம் தொடர்பான நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி வலுவான அடிப்படைகள் மற்றும் தொடர் சீர்திருத்த நடவடிக்கைகளை அடிப்படையாகக் கொண்டது என்றும் பிற நாடுகளுக்கு இழப்பை ஏற்படுத்துவதற்குப் பதிலாக, கூட்டுப் பொருளாதார வளர்ச்சியின் மூலம் உலக அளவில் தனது பொருளாதார செல்வாக்கை விரிவுபடுத்த இந்தியா விரும்புவதாகம் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்

மேலும் இந்தியா யாருடைய இழப்பிலும் வளர்வதில்லை என்றும் உலகத்துடனும், உலகிற்காகவும் வளர்கிறோம்,” எனவும் கூறினார்.

உலகளாவில் முக்கிய தொழில்நுட்பங்கள் மற்றும் வளங்களுக்கான போட்டி அதிகரித்து வரும் சூழலில், இந்தியாவை ஒரு நம்பகமான பொருளாதாரக் கூட்டாளியாக உள்ளதாக தெரிவித்தார்.
குறிப்பாக நிச்சயமற்ற தன்மைகள் நிறைந்த உலகில், இந்தியா நம்பகத்தன்மையையும் ஸ்திரத்தன்மையையும் வெளிப்படுத்துவதாக எடுத.துரைத்தார்

இந்தியாவின் பொருளாதாரம் கடந்த ஏப்ரல் முதல் ஜூன் காலாண்டில் 7.8 சதவீத வளர்ச்சியடைந்ததாகவும், இது நாட்டின் விரைவான பொருளாதார மீள்திறனை எடுத்துக்காட்டுவதாக உள்ளது எனக் கூறினார், இந்த வளர்ச்சி ஒரு வலுவான அடித்தளத்தின் மீது ஏற்பட்டதாகவும் குறிப்பிட்டார்.

கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு 4 சதவீதத்திற்கும் அதிகமாக இருந்த இந்தியாவின் நடப்புக் கணக்கு பற்றாக்குறை தற்போது அரை சதவீதத்திற்கும் கீழாக குறைக்கப்பட்டிருப்பதையும்,
தற்போது, 700 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமான அந்நியச் செலாவணி கையிருப்பு உள்ளதையும், வரிவிதிப்பு, திவால் நடைமுறைகள் மற்றும் தொழிலாளர் சட்டங்கள் தொடர்பான சீர்திருத்தங்களையும் பிரதமர் மோடி சுட்டிக்காட்டினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.