பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 119-வது பிறந்தநாள் விழாவும், 64-வது குருபூஜையும் இன்று நடைபெற்று வருகிறது. தேவர் ஜெயந்தியை முன்னிட்டு சென்னை நந்தனத்தில் உள்ள தேவர் சிலைக்கு முதலமைச்சர் விஜய் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்த நிகழ்வின் போது, முதலமைச்சருடன் அமைச்சர்கள் புஸ்சி ஆனந்த், செங்கோட்டையன், ஆதவ் அர்ஜூனா, ராஜ்மோகன், வெங்கட்ரமணன் உள்ளிட்ட அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும், சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் மற்றும் அரசு உயர் அதிகாரிகளும் உடனிருந்து முத்துராமலிங்கத் தேவரின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். முத்துராமலிங்கத் தேவரின் சிலை மற்றும் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்திய முதலமைச்சர் விஜய், அங்கு கூடியிருந்த தொண்டர்கள் மற்றும் பொதுமக்களை பார்த்து கையசைத்தபடி சிறிது தூரம் நடந்து சென்றார்.




