முதலமைச்சர் விஜய் அவ்வப்பொது பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். முன்னதாக செங்கல்பட்டு மாவட்டம், நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டப்பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்தார். இதனைத்தொடர்ந்து, எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை, சைதாப்பேட்டையிலுள்ள எம்.சி. இராஜா சமூக நீதி விடுதியில் முதலமைச்சர் விஜய் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அவ்விடுதியிலுள்ள சமையலறை மற்றும் உணவுக்கூடத்தைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது முதலமைச்சர் விஜய்யிடம் சில மாணவர்கள் தங்களது கோரிக்கைகளை கூறினர். இந்த கோரிக்கைகள் மறுநாளே நிறைவேற்றப்பட்டன.
இந்த நிலையில் இன்று சென்னை சேத்துப்பட்டில் உள்ள இயற்கை எரிவாயு உற்பத்தி மையத்தில் முதலமைச்சர் விஜய் ஆய்வு மேற்கொண்டார். அப்போது எரிவாயு ஆலையின் செயல்பாடுகள் குறித்தும் உற்பத்தி திறன் குறித்தும் ஆய்வு மேற்கொண்ட அவர் பணிகளை தொய்விறி விரைவுபடுத்த அதிகாரிகளுக்கு அறிவுருத்தினார்.




