சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய் நாள் தோறும் பலவேறு துறை அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் துறை செயல்பாடுகள் மற்றும் மேம்பாடு குறித்து ஆய்வுக் கூட்டங்களை நடத்தி வருகிறார்.
இந்த வகையில் இன்று மேகதாது அணை விவகாரம் குறித்து அமைச்சர்கள் மற்றும் சட்ட வல்லுநர்களுடன் முதலமைச்சர் விஜய் ஆலோசனை நடத்தினார். இதில் மேட்டூர் அணைக்கு கர்நாடகத்தில் இருந்து நீர்வராத நிலையில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், மேகதாது அணை விவகாரம் தொடர்பாகவும் சட்ட வல்லுநர்கள் மற்றும் காவிரி தொழில்நுட்பக் குழு அலுவலர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.
இக்கூட்டத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத் துறை அமைச்சர் என்.ஆனந்த், பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார், தலைமைச் செயலாளர் முனைவர் மு.சாய்குமார், அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், நீர்வளத்துறை முதன்மைச் செயலாளர் முனைவர் சத்யபிரத சாகு, சட்டத்துறைச் செயலாளர் பி.சுமதி, காவிரி தொழில்நுட்பக் குழுவின் தலைவர் ஆர்.சுப்பிரமணியன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.




