கரப்பான் பூச்சி கட்சியினர் மீது தடியடி – எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கண்டனம்!

நாடாளுமன்றம் நோக்கி பேரணி சென்ற கரப்பான் பூச்சி கட்சியினர் மீது நடைபெற்ற தடியடி தாக்குதலுக்கு ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

நீட் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட குளறுபடிகளுக்கு பொருப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவிலக கோரி நாடாளுமன்றம் நொக்கி பேரணி சென்ற கரப்பான் பூச்சி கட்சியினர் மீது காவல்துறை நடத்திய தாக்குதலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், “இந்திய வரலாற்றிலேயே இளைஞர்களுக்கு மிகவும் விரோதமான பிரதமர் மோடிதான். அவர் இளைஞர்களுக்கு எந்த அளவுக்கு விரோதமானவர் என்றால், கல்வித்துறையில் தோல்வியடைந்த அமைச்சர் தர்மேந்திர பிரதானின் ராஜினாமாவைக் கூட அவரால் கோர முடியவில்லை.

152 வினாத்தாள் கசிவுகள். 7.5 கோடி மாணவர்கள் பாதிக்கப்பட்டனர். ஆனால், குற்றவாளிகளில் ஒருவர்கூட தண்டிக்கப்படவில்லை. கடினமாக உழைக்கும் இளைஞர்களுக்கே தண்டனை கிடைத்தது?.

இளைஞர்கள் கல்வி குறித்து நியாயமான கேள்விகளை எழுப்பியபோது, ​​பதிலுக்கு அவர்கள் தடியடியை எதிர்கொண்னர். வினாத்தாள்களைக் கசியவிட்ட குற்றவாளிகள் சுதந்திரமாக நடமாடுகிறார்கள். ஆனால், நியாயமான பிரச்சினைகளை எழுப்பும் மாணவர்கள் தாக்கப்படுகிறார்கள்.

இந்த அரசாங்கம் இளைஞர்களுக்குத் துரோகம் இழைப்பது மட்டுமல்லாமல், அவர்கள் மீது தாக்குதலையும் நடத்துகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.