முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

சுதந்திர தினத்தன்று பூரண மதுவிலக்கு கொண்டுவருவதை முதலமைச்சர் அறிவிக்க வேண்டும்: அன்புமணி

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்துறைச்செயலாளரை சந்தித்து ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்ய வேண்டுமென வலியுறுத்தினார்.

பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்துறைச்செயலாளர் பனீந்திர ரெட்டியை நேரில் சந்தித்து ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்ய வேண்டுமென வலியுறுத்தினார். தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பிற்கு பிறகு பத்திரிக்கையாளர்களை சந்தித்த அன்புமணி தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய பாமக சார்பாக மனு அளித்துள்ளோம்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

கடந்த 5 ஆண்டுகாலத்தில் ஆன்லைனில் சூதாட்டம் விளையாடியவர்களில் 60-70 பேர் உயிரிழப்பு செய்துள்ளனர். சூதாட்டத்திற்கு எதிராக சட்டம் இருந்த காலத்தில் ஒரு உயிரிழப்பு கூட நடக்கவில்லை. ஆனால் சட்டத்தை தடை செய்தபிறகு, பல உயிரிழப்புகள் நடைபெற்று வருகிறது. ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வது தொடர்பாக அமைக்கப்பட்ட குழு பரிந்துரை அளித்தும் சட்டம் ஏற்படுத்தப்படுத்தவில்லை. பல பிரபலங்கள் அதற்கு ஆதரவாக இருப்பது தவறு, அவ்வாறு ஆதரவாக இருப்பது வறுத்தமளிக்கிறது. இனியும் ஆன்லைன் சூதாட்டத்தினால்  ஒரு உயிரை இழந்துவிடக் கூடாது.  எனவே சரத்குமார் உள்ளிட்ட திரை பிரபலங்களுக்கு இது ஒரு அன்பான வேண்டுகோள். ஆன்லைன் சூதாட்டம் பல உயிர்களை எடுத்துக்கொண்டுள்ள நிலையில்,  அதற்கு விளம்பரம் கொடுக்கக்கூடாது.

சட்டத்தை ஏற்படுத்த ஏன் தாமதம்?
இதுபோன்ற ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்து சட்டம் இயற்ற மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது. திமுக அரசு இதுவரை 3,331 மதுக்கடைகளை மூடியிருக்கின்றோம், படிப்படியாக பூரண மதுவிலக்கை அமல்படுத்துவோம் என திமுக தேர்தல் அறிக்கையில் கூறினர். இந்த சுதந்திர தினத்தன்று பூரண மதுவிலக்கை கொண்டு வருவோம் என முதலமைச்சர் அறிவிக்க வேண்டும். இந்த அறிவிப்பால் பலகோடி குடும்பங்கள் நன்மை பெறும்.

அடுத்த தலைமுறையை காப்பாற்றத் துடித்துக்கொண்டிருக்கிறோம் என முதலமைச்சர் போதை பொருட்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்துள்ளார் அதற்கு அவருக்கு வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துகொள்கிறேன். போதை பொருட்கள் தடுப்பு என்பது வெறும் அறிவிப்பாக இருக்கக்கூடாது அதற்கான நடவடிக்கையில் ஈடுட வேண்டும். தமிழக அரசு மற்றும் காவல்துறை இதில் அதிக கவனம் செலுத்தி குற்றங்களுக்கு எதிராக கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram