கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்து, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மாவட்ட ஆட்சியர்களுடன் இன்று ஆலோசனை நடத்துகிறார்.
தமிழ்நாட்டில், கொரோனா பரவல் கட்டுக்குள் வரத் தொடங்கியதைத் தொடர்ந்து, தொற்று பாதிப்பு குறைவாக உள்ள 27 மாவட்டங்களில் ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. இந்த தளர்வுகள் நேற்று அமலுக்கு வந்த நிலையில், தேனீர் கடைகள், சலூன்கள் உள்ளிட்டவை திறக்கப்பட்டுள்ளன. இந்நிலையில்,
காலை 11 மணிக்கு காணொலி வாயிலாக மாவட்ட ஆட்சித்தலைவர்களுடன் ஆலோசனை நடத்துகிறார் முதலமைச்சர் ஸ்டாலின். இந்த ஆலோசனை கூட்டதில் கொரோனா தடுப்புப்பணிகள், மேற்கொள்ள வேண்டிய வளர்ச்சிப்பணிகள் குறித்து ஆலோசிக்கிறார் முதலமைச்சர்.







