முக்கியச் செய்திகள் தமிழகம்

நேற்று ஒரே நாளில் 165 கோடி ரூபாய்க்கு மது விற்பனை!

தமிழ்நாட்டில், டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்பட்ட நிலையில், நேற்று ஒரே நாளில் 165 கோடி ரூபாய்க்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில், கொரோனா ஊரடங்கு காரணமாக டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்பட்டிருந்தன. தற்போது, தொற்றுப்பரவல், குறையத் தொடங்கிய நிலையில், டாஸ்மாக் மதுக்கடைகள் நேற்று திறக்கப்பட்டன. மது குடிப்போர், நீண்ட வரிசையில் காத்திருந்து மதுபாட்டில்களை வாங்கிச் சென்றனர். சென்னை கொரட்டூர் பகுதியில் உள்ள மதுக்கடையில், மது வாங்க வந்தவர்களுக்கு, தமிழ்நாடு மது குடிப்போர் நல சங்கம் சார்பில் அதன் மாநில தலைவர் செல்லபாண்டியன், ஆறுமுகம் ஆகியோர் இறந்தவரின் இறுதிநாள் சடங்கின்போது அளிப்பதை போன்று அரிசி மற்றும் பால் வழங்கினர். மேலும் மதுக்கடை திறந்தவுடன் மதுகுடிப்போர், மதுபானத்திற்கு தேங்காய் உடைத்து கற்பூரம் காட்டியும் பயபக்தியுடன் வணங்கி, மதுபாட்டிகளை வாங்கிச் சென்றனர்.

சென்னை மண்டலம் 43 கோடி, திருச்சி மண்டலம் 33 கோடி , மதுரை மண்டலம் 49 கோடி, சேலம் 38 கோடி ரூபாய்க்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரம்பலூரில், 4 ரோடு பகுதியில் அமைந்துள்ள டாஸ்மாக் கடையில் மது பிரியர்கள் மாஸ்க் அணிந்து சமூக இடைவெளிவிட்டு மது வாங்கி சென்றனர், இந்நிலையில் பெரம்பலூரில் நெடு நாள் கழித்து திறந்த டாஸ்மாக் கடைக்கு வந்த இரண்டு பேர் மதுபாட்டில்களை வாங்கி டாஸ்மாக் கடை முன்பு வைத்து மது பாட்டிலுக்கும் கடைக்கும் சூடம் ஏற்றி தேங்காயை உடைத்தனர்.

Advertisement:

Related posts

அதிமுக கூட்டணி கட்சிகளின் தொகுதி பட்டியல் இன்று வெளியாகும் என தகவல்!

Jeba Arul Robinson

புதுச்சேரியில் மதுபானங்களின் விலை குறைந்தது!

Ezhilarasan

கொரோனா தடுப்பூசி பயன்பாட்டு நடைமுறைகள்: நான்கு மாநிலங்களில் ஒத்திகை!

Jayapriya