இரண்டாம் தவணை கொரோனா நிவாரண நிதி 30-ம் தேதி வரை வழங்கப்படும்: அமைச்சர் சக்கரபாணி

குடும்ப அட்டை தாரர்களுக்கு, இரண்டாம் தவணை கொரோனா நிவாரண நிதி 2 ஆயிரம் ரூபாய் இம்மாதம் 30-ம் தேதி வரை வழங்கப்படும் என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம்…

குடும்ப அட்டை தாரர்களுக்கு, இரண்டாம் தவணை கொரோனா நிவாரண நிதி 2 ஆயிரம் ரூபாய் இம்மாதம் 30-ம் தேதி வரை வழங்கப்படும் என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, இரண்டாம் தவணையாக 2 ஆயிரம் ரூபாயும், 14 பொருட்கள் அடங்கிய மளிகை தொகுப்பும் இன்று முதல் விநியோகம் செய்யப்படுவதாக தெரிவித்தார். அந்தந்த மாவட்டங்களில் சூழ்நிலையை கருத்தில்கொண்டு, 75 முதல் 200 நபர்களுக்கு பணமும், பொருட்களும் விநியோகம் செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.

பொருட்கள் இம்மாதம் 30-ம் தேதி வரை வழங்கப்படும என்றும் பொதுமக்கள் அவசரமோ, அச்சமோ படாமல் வாங்கிக் கொள்ளலாம் என்றும் அவர் கூறினார். பொருட்கள் முழுமையாக மக்களை சென்றடைகிறதா என்பதை ஆய்வுசெய்ய ஒவ்வொரு பகுதியிலும் கண்காணிப்புக்குழுக்களும் அமைக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

நியாய விலைக்கடைகளில் பொருட்களுக்கு பணம் பெற்றால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார். நடமாடும் வாகனங்களில் நியாய விலைக்கடை பொருட்களை வழங்குவது முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று, நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.