பழைய நாணயங்களுக்கு சிக்கன் பிரியாணி! – அசத்திய கடை உரிமையாளர்!!

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் பழைய நாணயங்களுக்கு சிக்கன் பிரியாணி வழங்கியதால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அறந்தாங்கியில் , புதிதாக திறக்கப்பட்ட ஒரு உணவகத்தில் திறப்பு விழாவை முன்னிட்டு பழைய நாணயங்களை நினைவுபடுத்தும் வகையில் 5 பைசா,…

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் பழைய நாணயங்களுக்கு சிக்கன் பிரியாணி வழங்கியதால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

அறந்தாங்கியில் , புதிதாக திறக்கப்பட்ட ஒரு உணவகத்தில் திறப்பு விழாவை முன்னிட்டு பழைய நாணயங்களை நினைவுபடுத்தும் வகையில் 5 பைசா, 10 பைசா மற்றும் 20, 25 பைசா உள்ளிட்ட பழைய நாணயங்களை கொண்டு வருவோருக்கு சிக்கன் பிரியாணி மற்றும் சில்லி சிக்கனை இலவசமாக வழங்கினர்.

அசைவ உணவகம் திறப்பு விழா சலுகையால், அறந்தாங்கி மற்றும் அதன் சுற்றுவட்டார
பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் , அதிகளவில் முந்தைய பழைய நாணயங்களை கொடுத்து பிரியாணி மற்றும் சில்லி சிக்கனை வாங்கி சென்றனர்.

-கு.பாலமுருகன்

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.