திண்டுக்கல் அருகே நத்தமாடிபட்டியில் கருப்பண்ணசாமி கோயில் திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது
திண்டுக்கல் மாவட்டம் நத்தமாடிபட்டியில் கருப்பண்ணசாமி கோயில் திருவிழாவையொட்டி காலை 8 மணி ஜல்லிக்கட்டு தொடங்கியது. இப்போட்டியில் 481 காளைகளும், 112 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர். 5 சுற்றுகளாக நடைபெற்ற ஜல்லிக்கட்டில் சிறந்த காளைகளுக்கும் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கும் கட்டில், பீரோ, சைக்கிள், குக்கர், டிவி ஸ்டாண்ட், ரொக்கம் உள்ளிட்ட பரிசுப்பொருள்கள் வழங்கப்பட்டன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பிற்பகல் 2.30 மணிக்கு ஜல்லிக்கட்டு நிறைவடைந்தது. இதில் பார்வையாளர்களில் 9 பேரும், மாடுபிடி வீரர்கள் 4 பேரும், மாட்டின் உரிமையாளர்கள் 10 பேரும், பாதுகாப்பு குழுவில் ஒருவர் மொத்தம் 24 பேர் காயமடைந்துள்ளனர்.
போட்டியை பார்க்க வந்த கொசவபட்டியை சேர்ந்த இருதயராஜ் என்பவர் படுகாயத்துடன் மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வி.பாஸ்கரன் தலைமையில் 250-க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
-K.R. Anaka