சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சி அமைத்தால் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என அந்த மாநில முதலமைச்சர் பூபேஷ் பெகல் அறிவித்துள்ளார்.
சத்தீஸ்கர் மாநில சட்டப்பேரவைக்கு வரும் 7 மற்றும் 17 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. சட்டப்பேரவை தேர்தல்களை முன்னிட்டு அந்த மாநிலத்தில் காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
சத்தீஸ்கரில் இன்று நடைபெற்ற பிரச்சாரத்தில் முதலமைச்சர் பூபேஷ் பெகல் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:
- ஆண்டுதோறும் டெண்டு இலை (பீடி இலை) சேகரிக்கும் தொழிலாளர்களுக்கு ரூ.4,000 வழங்கப்படும்.
- விவசாயிகளின் கடன் தள்ளுபடி தொடரும்.
- மழலையர் கல்வி முதல் பட்ட மேற்படிப்பு வரை மாணவர்களுக்கு இலவசக்கல்வி வழங்கப்படும்.
- ஒவ்வொரு வீட்டுக்கும் கும் 200 யூனிட் மின்சாரம் இலவசமாக அளிக்கப்படும்
- சமையல் எரிவாயுவின் விலை ரூ.500-ஆக நிர்ணயிக்கப்படும்.
இதையும் படியுங்கள்: பயணிகளிடம் பயணச்சீட்டு வாங்க சில்லறை கேட்டு நிர்பந்திக்கூடாது என போக்குவரத்துத்துறை உத்தரவு
- மேலும் குப்சந்த் பாகல் சுகாதார உதவித் திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சம் வரை இலவச சிகிச்சையும்,
- முதலமைச்சரின் சிறப்புத் திட்டத்தின் கீழ் ரூ.25 லட்சம் வரை இலவச சிகிச்சையும் அளிக்கப்படும்.
- காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்”.
இவ்வாறு முதலமைச்சர் பூபேஷ் பெகல் அறிவித்தார்.







