நெல்லையில் பட்டியலின இளைஞர்களை தாக்கிய கஞ்சா போதை கும்பல்; 6 பேரை கைது செய்து போலீசார் விசாரணை…

நெல்லையில் பட்டியலின இளைஞர்கள் இருவரை தாக்கிய கஞ்சா போதை கும்பலைச் சேர்ந்த 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.  திருநெல்வேலி மாவட்டம் மணிமூர்த்தீஸ்வரம் பகுதியைச் சேர்ந்த இருவர் கடந்த 30 ஆம் தேதி தாமிரபரணி ஆற்றங்கரை…

நெல்லையில் பட்டியலின இளைஞர்கள் இருவரை தாக்கிய கஞ்சா போதை கும்பலைச் சேர்ந்த 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 

திருநெல்வேலி மாவட்டம் மணிமூர்த்தீஸ்வரம் பகுதியைச் சேர்ந்த இருவர் கடந்த 30 ஆம் தேதி தாமிரபரணி ஆற்றங்கரை ஓரம் குளிப்பதற்காக சென்று  உள்ளார்கள்.  குளித்துவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்த போது அங்கு வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பலானது பயங்கர ஆயுதலுடன் அவர்களை தாக்கி அவர்களிடத்தில் இருந்து செல்போன் மற்றும் பணத்தை பறித்துள்ளார்கள்.

இது மட்டுமில்லாமல் அவர்கள் எந்த சமூகத்தை சேர்ந்தவர்கள் என்று கேட்டு,  பட்டியலின சமூகம் என தெரிந்தவுடன் அவர்களை சரமாரியாக தாக்கியது மட்டும் இல்லாமல்,  அவர்கள் மீது சிறுநீர் கழித்து,  அவர்களை மாலை முதல் இரவு வரை வைத்து சித்திரவதை செய்ததாகவும்,  அதற்கு பிறகு அவர்களிடம் இருந்து இரண்டு பேரும் தப்பி இருக்கிறார்கள்.
அதை தொடர்ந்து அவர்கள் இருவரையும் மீட்ட அந்த ஊர் மக்கள்,  திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 
இது தொடர்பாக பட்டியலினத்தைச் சேர்ந்த இரண்டு இளைஞர்களும் தச்சநல்லூர் போலீசில் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறை நடத்திய முதல் கட்ட விசாரணையில்  பொன்னுமணி என்ற  நபர் தான்,  அவரின் நண்பருடன் சேர்ந்து இந்த செயலில் ஈடுபட்டதாகவும்,  அவர்கள் வேறு சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதும் தெரிகிறது.

 

அதனை தொடர்ந்து பொன்னுமணியை கைது செய்து,  அவர்களுடைய நண்பர்களான நல்லமுத்து,  ராமர்,  சிவா,  லட்சுமணன் உள்ளிட்ட 6 பேரையும் தச்சநல்லூர் போலீசார் கைது செய்துள்ளனர்.  இது மட்டும் இல்லாமல் அவர்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம் உட்பட பல்வேறு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தற்போது படுகாயம் அடைந்த இரு இளைஞர்களுக்கும் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  நெல்லை மாவட்டத்தில் அவ்வப்போது இது போன்ற சம்பவங்கள் அரங்கேறி  வரும் நிலையில் தற்போது மீண்டும் இது போன்ற  கொடூரம் அரங்கேறியது மிகவும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.