பள்ளி தலைமையாசிரியர் இடமாற்றத்திற்கு எதிர்ப்பு: 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் திடீர் போராட்டம்!!

லால்பேட்டையில் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் 300-க்கும்  மேற்பட்டோர் தலைமையாசிரியர் இளங்கோவன் இடமாற்றம் செய்யப்பட்டதை கண்டித்து பள்ளி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை…

லால்பேட்டையில் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் 300-க்கும்  மேற்பட்டோர் தலைமையாசிரியர் இளங்கோவன் இடமாற்றம் செய்யப்பட்டதை கண்டித்து பள்ளி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியராக இருந்த திருமுருகன் லால்பேட்டை அரசுப் பள்ளிக்கு மாற்றப்பட்டார். இதனையடுத்து,  அங்கு பணியாற்றிய இளங்கோவன் காட்டுமன்னார்கோவிலுக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.

இதனையறிந்த லால்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் 300 த்திற்க்கும் மேற்பட்டோர் தங்கள் தலைமையாசிரியர் இளங்கோவன் மாற்றபட்டத்தை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையறிந்த வந்த காவல்துறையினர் மாணவ, மாணவர்களிடையே பேச்சுவார்த்தை நடத்தி அனைவரையும் கலைந்து போக செய்தனர்.  தொடர்ந்து பள்ளி உள்ளே சென்ற மாணவ, மாணவிகள் பள்ளி வளாகத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.  பின்னர் தலைமையாசிரியர் மாற்றம் சம்பந்தமாக பேச்சுவார்த்தை நடத்தப்படும் என பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்ததால் அனைவரும் கலைந்து சென்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.