சென்னையில் ஊரடங்கை கண்காணிக்கும் குழுக்களின் எண்ணிக்கை 30 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக, மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.
சென்னையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நபர்களுக்கு பயிற்சி மருத்துவர்கள் ஆலோசனை வழங்கும் கட்டுப்பாட்டு மையம் ஒவ்வொரு மண்டலத்திலும் செயல்பட்டு வருகிறது.
அந்த வகையில், தேனாம்பேட்டையில் உள்ள கட்டுப்பாட்டு மையத்தில், மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, தயாநிதி மாறன் எம்பி, எம்எல்ஏக்கள் உதயநிதி ஸ்டாலின், எழிலன் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, “சென்னையில் கொரோனா கட்டுப்பாடு நடைமுறைகளை, மக்கள் தாமாக முன்வந்து கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தினார். ஊரடங்கை கண்காணிக்கும் குழுக்கள் 15-லிருந்து 30 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக கூறிய ககன்தீப் சிங் பேடி, இதுவரை 1 கோடியே 44 லட்சம் ரூபாய், அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.







